கயத்தாறு நூலகத்தில் 120 மாணவ உறுப்பினர்கள் சேர்ப்பு
கயத்தாறு நூலகத்தில் பள்ளி மாணவர்கள் 120 பேர் நூலக உறுப்பினர்களாக சேர்ந்தனர்.
கயத்தாறு நூலகத்தில் பள்ளி மாணவர்கள் 120 பேர் நூலக உறுப்பினர்களாக சேர்ந்தனர்.
கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் கயத்தாறு நூலகத்திற்கான உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியை ஷெர்லி தலைமை வகித்து, உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்கி வைத்தார். மாணவர், மாணவிகள் 120 பேர் தங்களை நூலக உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து, நூலகர் சிவபெருமாளிடம் வழங்கினர். தொடர்ந்து, தன்னார்வலர் காசிவிஸ்வநாதன், வழக்குரைஞர் நீதிப்பாண்டியன் ஆகியோர் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தி பேசினர்.
தெற்கு இலந்தைகுளத்தைச் சேர்ந்த வெ.மாரியப்பன், தொழிலதிபர் ராஜேந்திரபிரசாத் ஆகியோர் தலா ரூ.1000 செலுத்தி நூலகப் புரவலராகினர். நூலக உறுப்பினருக்கான அட்டை மாணவர், மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.