FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சாகுபுரம் டிசிடபிள்யூ சார்பில் வடிகால்கள் தூர்வாரும் பணி

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலிலின்பேரில், ஆத்தூர், கடம்பாகுளம், தலைவன்வடலிலி வடிகால்கள் தூர்வாரும் பணியை, சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தினர் வியாழக்கிழமை தொடங்கினர்.  

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலிலின்பேரில், ஆத்தூர், கடம்பாகுளம், தலைவன்வடலிலி வடிகால்கள் தூர்வாரும் பணியை, சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தினர் வியாழக்கிழமை தொடங்கினர்.  
திருச்செந்தூர் வட்டாட்சியர் தில்லைபாண்டியன் முன்னிலையில் கோட்டாட்சியர் கோவிந்தராஜு தலைமை வகித்து தலைவன்வடலிலி கடம்பா வடிகால் கால்வாயில் கரை அமைத்தல் மற்றும் தூர்வாரும் பணியை தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை துணை பொறியாளர் ரகுநாதன், திருச்செந்தூர் துணை வட்டாட்சியர் கோமதிசங்கர், ஆத்தூர் கிராம நிர்வாக அலுவலர் கனகரத்தினம், டிசிடபிள்யூ நிறுவன பொதுமேலாளர்(நிர்வாகம்) நவநீதபாலகிருஷ்ணன், துணை  பொதுமேலாளர்(சிவில்) கணேசன்,  மக்கள் தொடர்புதுறையினர் மற்றும் சிவில்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments