FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாணவி சோபியா குடும்பத்துக்கு முழு பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை: அமைச்சர் கடம்பூர் செ. ராஜு

ஆராய்ச்சி மாணவி சோபியா குடும்பத்துக்கு முழு பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை என்றார் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

ஆராய்ச்சி மாணவி சோபியா குடும்பத்துக்கு முழு பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை என்றார் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு.
 தூத்துக்குடியில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:  ஜனநாயக நாடான இந்தியாவில் அனைவருக்கும் கருத்துரிமை, பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் உண்டு. ஆனால், எந்த இடத்தில் கருத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை பார்த்து நடந்து கொள்ள வேண்டும். இடம், பொருள் தெரிந்து கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.
மாணவி சோபியா விவகாரத்தில் காவல்துறை தன் கடமையை செய்யும். சோபியா குடும்பத்துக்கு முழு பாதுகாப்பு கொடுப்பது தமிழக அரசின் கடமை. குட்கா விவகாரம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுபடி சிபிஐ சோதனை நடைபெற்றுள்ளது. அதற்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments