FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தூத்துக்குடியில் ராட்சத இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ராட்சத இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:


தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ராட்சத இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

கரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநராட்சிக்குள்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிறிய வகை இயந்திரம் மற்றும் கைத்தெளிப்பான் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு சொந்தமான லாரியுடன் இணைந்த ராட்சத கிருமி நாசினி தெளிப்பு இயந்திரம் மூலம் தூத்துக்குடி பிரதான சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இப் பணியை மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன் தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், இந்த இயந்திரம் ஏறத்தாழ 8 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்டதாகவும். இந்த இயந்திரம் பிரதான சாலைகளில் மட்டுமே பயணிக்கும் வசதி கொண்டது. 10 நாள்கள் வரை தூத்துக்குடி மாநகரப் பகுதியில் கிருமி நாசினி தெளித்த பிறகு மீண்டும் இயந்திரம் வ.உ.சிதம்பரனாா் துறைமுக நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments