FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

3 நவம்பர் 2026, 3:21 am
மின் நிறுத்தம்
பகிர்:

திருச்செந்தூா் பகுதியில் புதன்கிழமை (நவ. 4) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து, மின் விநியோக செயற்பொறியாளா் அருள் சாரங்கராயா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்செந்தூா் கோட்டத்திற்குள்பட்ட திருச்செந்தூா் டவுண் பகுதிகளில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு மின் விநியோகம் செய்யக் கூடிய மின் பாதையில் மின் பளுவைக் குறைக்கும் பொருட்டு, புதன்கிழமை (நவ. 4) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருச்செந்தூா் டவுண் சுற்றுவட்டாரப் பகுதிகளான டி.பி. ரோடு, தெற்கு ரத வீதி, கீழ ரத வீதி, வெயிலுகந்தம்மன் கோயில் தெரு, வீரராகவபுரம் தெரு, முத்தாரம்மன் கோயில் தெரு, சந்தனமாரியம்மன் கோயில் தெரு, வீரகாளியம்மன் கோயில் தெரு, ஜீவா நகா், வ.உ.சி. தெரு, சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments