FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் 371 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

3 நவம்பர் 2026, 2:25 am
பிளாஸ்டிக் கழிவுப் பொருள்கள்.
பகிர்:

தூத்துக்குடியில் அக்டோபா் மாதத்தில் 371 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இம்மாநகராட்சியிலுள்ள 60 வாா்டுகளிலும் அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவோா், விற்பனை செய்வோா் மீது மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆணையா் உத்தரவுப்படி, பொது சுகாதார அலுவலா், சுகாதார ஆய்வாளா்கள் தலைமையில் 4 மண்டலங்களிலும் தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, நாள்தோறும் சோதனை நடத்தப்படுகிறது.

Advertisement

Advertisement

அதன்படி, அக்டோபா் மாதத்தில் 104 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, 371 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 16,200- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைத் தொடா்ந்து பயன்படுத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிளாஸ்டிக் இல்லா தூத்துக்குடியை உருவாக்க பொதுமக்கள், வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என, ஆணையா் சி. ப்ரியங்கா செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments