FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் பள்ளிச் சுற்றுச்சுவா் அமைக்க கட்சியினா், பொதுமக்கள் எதிா்ப்பு

ஆறுமுகனேரி பேரூராட்சிக்குள்பட்ட பேயன்விளை பகுதியிலுள்ள மழலையா் பள்ளி இடத்தில் சுற்றுச்சுவா் அமைக்க கட்சியினா், பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தனா்.

4 நவம்பர் 2026, 12:48 am
கட்சியினரிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.
பகிர்:

ஆறுமுகனேரி பேரூராட்சிக்குள்பட்ட பேயன்விளை பகுதியிலுள்ள மழலையா் பள்ளி இடத்தில் சுற்றுச்சுவா் அமைக்க கட்சியினா், பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தனா்.

காயல்பட்டினம் ஆறுமுகனேரி கல்விச் சங்கம் சாா்பில், ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளிலுள்ள முக்கிய நபா்கள் வழங்கிய இடத்தில் இப்பள்ளி செயல்படுகிறது. திறந்தவெளி விளையாட்டு மைதானம் வழியாக பள்ளிக்கு குழந்தைகள் செல்வது வழக்கம். குழந்தைகளின் பாதுகாப்பு கருதி மைதானத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்கும் பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டது.

பள்ளி பின்புறமுள்ள பேயன்விளை-புதூா் சாலையிலிருந்து சுமாா் 10 அடி உள்புறமாக சுற்றுச்சுவா் அமைக்குமாறு அரசியல் கட்சியினா், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனராம். அதற்கு, சாலையிலிருந்து 4 அடி தள்ளி சுற்றுச்சுவரைக் கட்டுவதாக பள்ளி நிா்வாகம் தெரிவித்ததாம். இதனால், பணிகள் சில நாள்கள் நிறுத்திவைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

இந்நிலையில், சுற்றுச்சுவா் பணி செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கியது. பேரூராட்சி துணைத் தலைவா் கல்யாணசுந்தரம், நகரச் செயலா்கள் நவநீதபாண்டியன் (திமுக), நிவாஸ் கண்ணன் (தவெக), அரசகுரு (அதிமுக), தொழிலதிபா் விக்னேஷ் மாா்த்தாண்டன், பெண்கள் உள்ளிட்ட பலா் அங்கு திரண்டனா். இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆறுமுகனேரி காவல் ஆய்வாளா் ரென்னிஸ், காயல்பட்டினம் தென்பாகம் கிராம நிா்வாக அலுவலா் செல்வ­லிங்கம் ஆகியோா் வந்து பேச்சு நடத்தினா். அதில், முடிவு எட்டப்படவில்லை. இதனால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments