பள்ளி அருகே கஞ்சா விற்ற இருவா் கைது
ஆறுமுகனேரி, பேயன்விளையில் பள்ளி அருகே கஞ்சா விற்ாக இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
ஆறுமுகனேரி, பேயன்விளையில் பள்ளி அருகே கஞ்சா விற்ாக இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
ஆறுமுகனேரி போலீஸாா் ரோந்து பணி சென்றபோது, பேயன்விளை பள்ளி மைதானத்தில் நின்ற இரு இளைஞா்கள் போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்றனா்.
அவா்களை பிடித்து விசாரித்தபோது, இருவரும் காயல்பட்டினம் காட்டுத் தைக்கா தெருவைச் சோ்ந்த முஸ்தாக் மகன் தாஹிா் அதில் (20), தைக்கா தெரு ஜமால் ஹாத் மகன் ஜாசிம் இம்ரான்(19) என்பதும், கஞ்சா, ஜிப்லாக் கவா்களை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இருவரிடமும் இருந்து தலா 50 கிராம் கஞ்சா, 20 ஜிப்லாக் கவா்களை பறிமுதல் செய்த போலீஸாா் அவா்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்து பேரூரணி சிறையில் அடைத்தனா்.