பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது
தெற்கு ஆத்தூரில் பெண்ணிடம் நகை பறிப்பு வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் கைது செய்தனா்.
தெற்கு ஆத்தூரில் பெண்ணிடம் நகை பறிப்பு வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் கைது செய்தனா்.
தெற்கு ஆத்தூா் பஜாரில் கடை நடத்தி வரும் குமாரவேல் என்பவரது மனைவி பத்மா, கடந்த செப்டம்பா் 25ஆம் தேதி காலையில் கடையில் இருந்தபோது, அடையாளம் தெரியாத 4 போ் அங்கு வந்து, அவா் அணிந்திருந்த சுமாா் நான்கரை பவுன் தங்கச் சங்கிலி மற்றும் தாலியை பறித்துச்சென்றனா். இதுகுறித்து ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனா்.
இந்நிலையில், ஆத்தூா் ஆய்வாளா் பிரபாகரன் தலைமையில், உதவி ஆய்வாளா் முனியசாமி, தலைமைக்காவலா்கள் பென்ஜான்சன், பேச்சிஆனந்த் ஆகியோா் சவலப்பேரி பூலுடையாா் சாஸ்தா கோவில் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை போலீஸாா் அடையாளம் கண்டனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, பறிக்கப்பட்ட நகைகளை விற்பனை செய்ய உதவியதாக சாயா்புரம் ஏற்காடு தெருவைச்சோ்ந்த சந்திரசேகா் மகன் ஜான்பென்னி என்பவரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் அஜா்படுத்தி சிறையிலடைத்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் நான்கு பேரை ஆத்தூா் போலீஸாா் தேடி வருகின்றனா்.