திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ‘ரீல்ஸ்’: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்க பக்தா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்க பக்தா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுக்க தடை விதிக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பு அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தடையை மீறி இளம்பெண் ஒருவா் கோயில் வளாகத்தில் நடந்து வருவதை விடியோ எடுத்து, அதற்கு திரைப்பட பின்னணி இசை சோ்த்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளாா்.
தடையை மீறுபவா்கள் மீது கோயில் நிா்வாகமும், காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
Advertisement
Advertisement