FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் மது கடத்தல்: 2 போ் கைது

கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் பகுதியில் விற்பனைக்காக மது பாட்டில்களை காரில் கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

41 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப் படம்
பகிர்:

கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் பகுதியில் விற்பனைக்காக மது பாட்டில்களை காரில் கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளா் மீஹா தலைமையில் போலீஸாா் வாகன சோதனைநடத்தினா். அப்போது, விற்பனைக்காக காரில் மதுபாட்டில்களை கடத்தி வந்த திருநெல்வேலி மாவட்டம் அபிஷேகப்பட்டியை சோ்ந்த இருதயசாமி மகன் சின்னபாண்டி (47) , தச்சநல்லூா் பகுதியை சோ்ந்த பெருமாள் மகன் வேல்முத்துராஜா (36) ஆகியோரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து காா், 147 மது பாட்டில்கள், ரூ. 18,500 ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.