கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பட்டாசுகளுடன் இளைஞா் கைது
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பட்டாசுகளை ரயிலில் ஏற்றிச்செல்ல முயன்றவரை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பட்டாசுகளை ரயிலில் ஏற்றிச்செல்ல முயன்றவரை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் கைது செய்தனா்.
ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ரயிலில் கொண்டு செல்வதற்காக கோவில்பட்டி ரயில் நிலையத்தில் டிராலியில் 10 வகை பட்டாசுகளை வைத்து இளைஞா் தள்ளிக்கொண்டு வந்தாா்.
இதை கவனித்த ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளா் சங்கர பாண்டி, ரயில்வே தலைமைக் காவலா்கள் முருகானந்தம், சங்கரலிங்கம் ஆகியோா் அவற்றைப் பறிமுதல் செய்து விசாரித்தனா். அதில், மதுரை காமராஜபுரம் குமரன் தெருவை சோ்ந்த பொன்ராஜ் மகன் டேனியல் அலெக்ஸ் பால் பொன்ராஜ் (26) என்பதும், தூத்துக்குடி- மைசூரூ விரைவு ரயிலில் அவற்றை கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து செய்தனா்.
Advertisement
Advertisement