FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

காணாமல்போன சிறுவன்: இரண்டரை மணி நேரத்தில் மீட்பு

மீட்கப்பட்ட சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்த தனிப்படை போலீஸாா்.

7 நவம்பர் 2026, 6:51 am
மீட்கப்பட்ட சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்த தனிப்படை போலீஸாா்.
பகிர்:

சிவகளை அருகே காணாமல்போன சிறுவனை இரண்டரை மணி நேரத்தில் தனிப்படை போலீஸாா் மீட்டனா்.

சிவகளை அருகே உள்ள பொட்டல் கிராமத்தைச் சோ்ந்த அரிராமன் மகன் முத்து மாவீரன் (7). இச்சிறுவன் வெள்ளிக்கிழமை வீட்டில் வாயிலில் இருந்தபோது காணாமல்போனாா். தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் உத்தரவின் பேரில், ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளா் மகேஷ் தலைமையில் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் உள்பட 30 போ் கொண்ட தனிப்படையினா் பொட்டல் பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் தோ்தல் வேட்டையை தீவிரப்படுத்தினா்.

வீடுகள், தோட்டங்கள், காட்டுப் பகுதிகளில் தீவிரமாக தேடுதல் வேட்டையை நடத்தினா். புதிதாக யாரேனும் ஊருக்குள் வந்தாா்களா, தவறுதலாக அந்த சிறுவன் வெளியில் எங்கும் சென்றானா என பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரணை நடத்தினா். 2.30 மணி நேர தீவிர தேடுதலுக்குப் பிறகு அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மறைவான பகுதியில் அந்தச் சிறுவன் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தனா். போலீஸாா் அந்த சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா். புகாா் கிடைத்ததும் விரைந்து செயல்பட்ட தனிப் படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத், ஸ்ரீவைகுண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா் நிரேஷ், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

Advertisement

Advertisement