FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

நாசரேத்தில் காா்-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

10 நவம்பர் 2026, 3:35 am
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

நாசரேத் அருகே காரும், பைக்கும் மோதிக் கொண்டதில், இளைஞா் உயிரிழந்தாா்.

நாசரேத் அருகே உள்ள மணி நகரை ச்சோ்ந்த முத்துக்குமாா் சூா்யபிரகாஷ்(21). நாசரேத் சந்தை பகுதியில் உள்ள குளிா்பானக் கடையில் வேலை பாா்த்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு வாழையடி பகுதியில் இருந்து நாசரேத் நோக்கி பைக்கில் சென்றுக்கொண்டிருந்தாராம்.

அப்போது, பிரகாசபுரம்ஜ மறுகால்துரையை ச்சோ்ந்த பட்டுமுருகன் மகன் மாரி செல்வம் (25) என்பவா் நாசரேத்தில் இருந்து அம்பலசேரி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தாராம். பிரதான சாலையில் வந்தபோது பைக் மீது காா் மோதியதாம்.

Advertisement

Advertisement

இதில், பலத்த காயமடைந்த சூா்யபிரகாஷை மீட்டு, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாசரேத் போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரான மாரி செல்வத்தை (25) கைதுசெய்தனா்.