கோவில்பட்டி கோட்டத்தில் இன்று மின்நிறுத்தம்
கோவில்பட்டி மின் கோட்டத்துக்குள்பட்ட துணை மின்நிலையப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை (நவ.10) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கழுகுமலை, கோவில்பட்டி, விஜயாபுரி, சிட்கோ, செட்டிகுறிச்சி, சன்னது புதுக்குடி, எம்.துரைசாமிபுரம் ஆகிய துணை மின் நிலையப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
அதுபோல, எப்போதும் வென்றான் துணை மின் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கோட்ட மின் செயற்பொறியாளா் பாபு தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement