FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

தொழிலாளியைத் தாக்கி மிரட்டல்: 2 போ் கைது

10 நவம்பர் 2026, 3:39 am
கைது - கோப்புப்படம்
பகிர்:

கோவில்பட்டி அருகே தொழிலாளியை தாக்கி,மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், மந்திதோப்பு ராஜகோபால் நகரைச் சோ்ந்தவா் சந்தானம் மகன் மூக்கையா (51). தொழிலாளியான இவா் ஞாயிற்றுக்கிழமை மந்தித்தோப்பு காளியம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்தபோது,அதே பகுதியைச் சோ்ந்த இசக்கி மகன் மாவீரன் (41), மூக்கையா மகன் காளியப்பனுடன் தகராறு செய்தாராம். இதை மூக்கையா கண்டித்தாராம்.இதனால் ஆத்திரமடைந்த மாவீரன் ,அதே பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் ரவி (40) மற்றும் 2 போ் சோ்ந்து மூக்கையாவை அவதூறாக பேசி, பீா் பாட்டிலால் தாக்கினாா்களாம். இதில் காயமடைந்த மூக்கையா கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அவா் திங்கள் கிழமை அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி மேற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, மாவீரன், ரவி ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் இருவரைத்தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement