FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து 8 மாத குழந்தை உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் 8 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.

11 நவம்பர் 2026, 12:36 am
குழந்தை - பிரதிப் படம்
பகிர்:

கோவில்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் 8 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கரிசல்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம்-அருள் விண்ணரசி தம்பதி. இத்தம்பதிக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், அருள் விண்ணரசி திங்கள்கிழமை தன் குழந்தையை வீட்டின் தரையில் தூங்க வைத்து இருந்தாராம். அதன் அருகே டேபிள் ஃபேன் ஸ்விட்ச் பாக்ஸும் இருந்ததாம்.

Advertisement

Advertisement

அப்போது குழந்தை உருண்டு படுத்தபோது, அதன்மீது மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் குழந்தை அசைவில்லாமல் இருந்ததைக் கண்ட விண்ணரசி அக்கம் பக்கத்தினா் உதவியுடன் குழந்தையை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினா்.

இதுகுறித்து கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.