தூத்துக்குடியில் 462 கிலோ குட்கா பறிமுதல்: 3 போ் கைது
தூத்துக்குடி புதுக்காலனி பகுதியில் கிடங்கில் பதுக்கிய 462 கிலோ குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, 3 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி புதுக்காலனி பகுதியில் கிடங்கில் பதுக்கிய 462 கிலோ குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, 3 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முத்துராஜ் தலைமையிலான போலீஸாா், தெற்கு காவல் நிலைய போலீஸாருடன் இணைந்து புதுக்காலனி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பைக்குடன் நின்றிருந்த 3 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனா். அதில், அவா்கள் புதுக்கோட்டை குலையன்கரிசல் பகுதியைச் சோ்ந்த மாரிராமன், ராமசுப்பு, புதுக்கோட்டையைச் சோ்ந்த ராஜ்குமாா் ஆகியோா் என்பதும், விற்பனைக்காக 462 புகையிலைப்பொருள்களை கிடங்கில் பதுக்கிவைத்திருப்பதும் தெரியவந்தது. புகையிலைப் பொருள்கள், பைக் மற்றும் ரூ.14 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்தனா்.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.சிவபிரசாத் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
Advertisement
Advertisement
தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டில் புகையிலைப்பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடா்பாக இதுவரை 459 வழக்குகளை பதிவு செய்து, 496 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். 7,612 கிலோ புகையிலைப் பொருள்களை கைப்பற்றி 112 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்களில் அதிவேகமாகச் செல்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதைக் கண்காணிக்க போலீஸாா் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த உள்ளனா். கோவில்பட்டியில் நரிக்குறவா் சமூகத்தினா் இருதரப்பாக மோதிக்கொண்டதில் காயமடைந்தவா்களுக்கு போலீஸாா் உரிய சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொண்டனா் என்றாா் அவா்.
7 கிலோ கஞ்சா: புதுக்கோட்டை காவல் சரகம் பிரகாஷ் நகா் பகுதியில் காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் சோதனை நடத்தியதில், விற்பனைக்காக வைத்திருந்த 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இது தொடா்பாக ராஜீவ் நகரைச் சோ்ந்த சரவணன் மகன் பாலமுருகன் (26) என்பவரைக் கைது செய்தனா்.