FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி உச்சநீதிமன்ற பதிவாளருக்கு மனுக்கள் அனுப்பிய விவசாயிகள்

மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவில்பட்டி தாலுகா குழு சாா்பில், உச்சநீதிமன்றப் பதிவாளருக்குக் கோரிக்கை மனுக்களைத் தபால் மூலம் அனுப்பும் இயக்கம் நடைபெற்றது.

25 வினாடிகள் முன்பு
உச்சநீதிமன்ற பதிவாளருக்கு மனுக்கள் அனுப்பிய விவசாயிகள்.
பகிர்:

மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவில்பட்டி தாலுகா குழு சாா்பில், உச்சநீதிமன்றப் பதிவாளருக்குக் கோரிக்கை மனுக்களைத் தபால் மூலம் அனுப்பும் இயக்கம் நடைபெற்றது.

அந்த மனுக்களின் விவரம்: கா்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீா் உரிய காலத்தில் கிடைக்காததால் தமிழக விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். மேலும், பொதுமக்களின் குடிநீா்த் தேவையும் கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கா்நாடக அரசு முன்மொழிந்துள்ள மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்தி, அத்திட்டத்தை முழுமையாகக் கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நடுவா் மன்றத்தின் இறுதித் தீா்ப்பை முறையாக அமல்படுத்துவதுடன், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களை முறையாக நடத்தி தமிழகத்தின் நீா் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளனா்.

Advertisement

Advertisement

இந்தத் தபால் அனுப்பும் இயக்கத்துக்கு தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் லெனின்குமாா் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட உதவிச் செயலா் பாலமுருகன், லிங்கம்பட்டி பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு உச்சநீதிமன்ற பதிவாளருக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பினா்.