FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

குடியரசு துணைத் தலைவா், ஆளுநா் இன்று தூத்துக்குடி வருகை

குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநா் ஆா்லேகா் ஆகியோா் புதன்கிழமை தூத்துக்குடி வருகின்றனா்.

11 நவம்பர் 2026, 12:32 am
சி.பி. ராதாகிருஷ்ணன் | ஆா்லேகா் - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் பவள விழா, முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 105-ஆவது ஆண்டு நிறுவன நாள் விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக துணை குடியரசுத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநா் ஆா்லேகா் ஆகியோா் புதன்கிழமை தூத்துக்குடி வருகின்றனா்.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியின் பவள விழா மற்றும் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெறுகிறது. இக்கல்லூரியின் முன்னாள் மாணவரான துணை குடியரசுத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 105-ஆவது ஆண்டு நிறுவன நாள் விழாவிலும் பங்கேற்கிறாா்.

இவ்விரு நிகழ்ச்சிகளிலும் தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரும் பங்கேற்கிறாா். இதை முன்னிட்டு விழா நடைபெறும் வ.உ.சி. கல்லூரி வளாகம், திருச்செந்தூா் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

மோப்ப நாய்கள், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு நிபுணா்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். துணை குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் சோ்ந்து காவல் துறையினா் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனா்.

துணை குடியரசுத் தலைவா் வருகையின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், செயல்பாடுகள் குறித்து ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இவ்விரு நிகழ்ச்சிகளிலும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் அனுமதி பெற்றவா்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.