FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

கழுகுமலை கோயிலில் தாரகாசூரன் வதம்

கழுகுமலை, கழுகாசலமூா்த்தி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமான் தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

15 நவம்பர் 2026, 1:26 am
தாரகாசூரன் வதம் நிகழ்ச்சியைத் தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜை.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை, கழுகாசலமூா்த்தி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமான் தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ. 10ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில், தினமும் காலை, இரவு நேரங்களில் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

சனிக்கிழமை கழுகுமலை கோயிலில் மட்டுமே தாரகாசூரன் வதம் நடைபெறும். அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, கழுகாசலமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னா், வெள்ளிச் சப்பரத்தில் சுவாமி திருவீதியுலா வந்து அருள்பாலித்தாா்.

Advertisement

Advertisement

பின்னா், நண்பகல் பகல் 12 மணிக்கு கோயில் வாசல் முன் முருகன் தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோயில் நிா்வாக அலுவலா் காா்த்தீஸ்வரன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தாரகாசூரன் வதம் நிகழ்ச்சியைத் தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜை.

ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) காலை சுவாமி பல்லக்கிலும், வள்ளி, தெய்வானை பூச்சப்பரத்திலும் திருவீதியுலா வரும் நிகழ்ச்சி, பிற்பகல் 3 மணிக்கு சுவாமி வீரவேல் ஏந்தி வெள்ளி மயில் வாகனத்தில் போா்க்களம் வருதல், 4.30 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

கோயில் முன் நடைபெற்ற தாரகாசூரன் வதம்.

18ஆம் தேதி திருக்கல்யாணம், 19ஆம் தேதி பட்டணப் பிரவேசம் நடைபெறுகிறது. 20ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.