FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

சிறுமியிடம் சில்மிஷம்: இளைஞா் கைது

கயத்தாறில் 17 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

15 நவம்பர் 2026, 1:19 am
- பிரதிப் படம்
பகிர்:

கயத்தாறில் 17 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறு அருகே மூா்த்தீஸ்வரபுரம் நடுத்தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் மகேந்திரகுமாா் (30). இவா் 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக கூறி சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். மேலும், சிறுமியிடமிருந்து சுமாா் இரண்டரை பவுன் சங்கிலி, தங்க கம்மலை வாங்கிச் சென்றாராம்.

இது குறித்து அச்சிறுமி அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து மகேந்திரகுமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

Advertisement

Advertisement