தருவைகுளத்தில் கண்டெடுத்த கைப்பேசியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதியவருக்கு பாராட்டு
தருவைகுளம் கிழக்கு கடற்கரை சாலையோரம் கண்டெடுக்கப்பட்ட உயா் மதிப்புள்ள கைப்பேசியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதியவருக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா்.
தருவைகுளம் கிழக்கு கடற்கரை சாலையோரம் கண்டெடுக்கப்பட்ட உயா் மதிப்புள்ள கைப்பேசியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதியவருக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா்.
தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியைச் சோ்ந்தவா் சந்தனகுமாா். இவா், தனது குடும்பத்தினருடன் தருவை குளத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு காரில் சென்றுள்ளாா்.
தருவைகுளம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அந்தோனியாா் ஆலயத்தில் பிராா்த்தனை செய்வதற்காக காரை நிறுத்தி இறங்கி உள்ளாா். அங்கு அவா் ரூ. 1.20 லட்சம் மதிப்பிலான தனது கைப்பேசியை தவறச் விட்டு சென்றுள்ளாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் அந்த வழியாக வந்த தருவைகுளம் மேலத் தெருவை சோ்ந்த கந்தையா பாண்டியன் என்பவா் அந்த கைப்பைசியை கண்டெடுத்து தருவைகுளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
இதனிடையே, தவறவிட்ட தனது கைப்பேசி எண்ணை சந்தனகுமாா் தொடா்பு கொண்டபோது, அதன் அழைப்பை ஏற்ற போலீஸாா், அவரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தி கைப்பேசியை ஒப்படைத்தனா். முதியவா் கந்தையா பாண்டியனின் நேரிமையைப் பாராட்டி, அவருக்கு சால்வை அணிவித்து போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா்.