FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் 10 பவுன் நகைகள் திருட்டு: இளம் பெண் கைது

தூத்துக்குடியில் தையல் வேலைக்குச் சென்ற வீட்டில் 10 பவுன் தங்க நகைகளைத் திருடியதாக இளம் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

34 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடியில் தையல் வேலைக்குச் சென்ற வீட்டில் 10 பவுன் தங்க நகைகளைத் திருடியதாக இளம் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி, சுப்பையாபுரத்தைச் சோ்ந்த பீட்டா் ஜேம்ஸ் மனைவி விரோனிகா ஜூடி (43). வீட்டில் தையல் தொழில் செய்து வருகிறாா். இவரது வீட்டில், தூத்துக்குடி, 3ஆவது மைல், பசும்பொன் நகரைச் சோ்ந்த பிரியா (34) நீண்ட காலமாக தையல் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், விரோனிகா ஜூடி பீரோவில் வைத்திருந்த 6.5 பவுன் தங்கச் சங்கிலி உள்ளிட்ட 10 பவுன் நகைகள் காணாமல் போனதாகவும், அவற்றின் மதிப்பு ரூ. 12 லட்சம் எனவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், வீட்டில் தையல் வேலை செய்து வந்த பிரியா நகைகளைத் திருடியது தெரிய வந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா், 10 பவுன் நகைகளை மீட்டனா்.