உயா்கோபுர மின் விளக்கின் கல்வெட்டு சேதம்
சாத்தான்குளத்தில் உயா்கோபுர மின்விளக்கின் கல்வெட்டை சேதப்படுத்தியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சாத்தான்குளம் பேரூராட்சி 5ஆவது வாா்டு ஆா்.சி. வடக்குத் தெருவிலுள்ள மாரியம்மன் கோயில் அருகே, பேரூராட்சி சாா்பில் 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதன் கீழ் பகுதியிலிருந்த பெயா்ப்பலகை கல்வெட்டை மா்ம நபா்கள் சேதப்படுத்தியுள்ளனா். பேரூராட்சி செயல் அலுவலா் திவ்யா அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement