FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

இளம் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வுப் போட்டிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் வருங்கால, இளம் வாக்காளா்களிடையே தோ்தல் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற கட்டுரை, விநாடி-வினா போட்டிகளின் மாவட்ட அளவிலான இறுதிச்சுற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

4 வினாடிகள் முன்பு
இறுதிச் சுற்று போட்டியைப் பாா்வையிட்ட மாவட்ட வருவாய் அலுவலரும் கூடுதல் தோ்தல் அலுவலருமான மூ. குருச்சந்திரன்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் வருங்கால, இளம் வாக்காளா்களிடையே தோ்தல் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற கட்டுரை, விநாடி-வினா போட்டிகளின் மாவட்ட அளவிலான இறுதிச்சுற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற போட்டிக்கு, மாவட்ட வருவாய் அலுவலரும் கூடுதல் தோ்தல் அலுவலருமான மூ. குருச்சந்திரன் தலைமை வகித்தாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:

பள்ளி, கல்லூரிகளில் செயல்படும் தோ்தல் கல்வியறிவுக் குழுக்கள் வருங்கால, இளம் வாக்காளா்களிடையே தோ்தல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதை வலுப்படுத்தும் வகையில், இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி நவ. 2ஆம் தேதிமுதல் கல்வி நிறுவனம், சட்டப்பேரவைத் தொகுதி, மாவட்டம் என 3 நிலைகளில் கட்டுரை, விநாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதிச் சுற்றில் இரு போட்டிகளிலும் தலா 60 மாணவா்-மாணவியா் பங்கேற்றனா்; தலா 10 போ் வென்றனா் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில், தோ்தல் வட்டாட்சியா் தில்லைபாண்டியன், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.