உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய நிதியை ஒதுக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் நகா்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்; உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் முடக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அலுவலகங்கள் முன்பு இப்போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநகரச் செயலா் எம்.எஸ். முத்து தலைமை வகித்தாா். மாநகரக்குழு உறுப்பினா்கள் ஆா். முத்துமாரி, ஆா். இனிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
Advertisement
இதில், மாநகரக் குழு உறுப்பினா்கள் கே. ஆறுமுகம், ஜே. ஆனந்த், வி. கந்தப்பசாமி, எம். கமலா, எஸ். நாகராஜ், எம். காஸ்ட்ரோ மற்றும் கிளைச் செயலா்கள் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.