FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் சுவாமி - அம்மன் ஊஞ்சல் உற்சவம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி, சுவாமி குமரவிடங்கப்பெருமான் - தெய்வானை அம்மன் ஊஞ்சல் உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

19 நவம்பர் 2026, 4:59 am
திருச்செந்தூா் கோயிலில் புதன்கிழமை மாலை நடைபெற்ற சுவாமி குமரவிடங்கப்பெருமான் - தெய்வானை அம்மன் ஊஞ்சல் உற்சவம்.
பகிர்:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி, சுவாமி குமரவிடங்கப்பெருமான் - தெய்வானை அம்மன் ஊஞ்சல் உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கந்த சஷ்டி விழா நவ. 10 ஆம் தேதி தேதி தொடங்கியது. விழாவில் 9 ஆம் நாளான புதன்கிழமை மாலை கோயில் ராஜகோபுரம் வாசலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில், சுவாமி - தெய்வானை அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, வியாழன், வெள்ளி (நவ. 19, 20) ஆகிய இரு நாள்களும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. சனிக்கிழமை (நவ. 21) மஞ்சள் நீராட்டு நடைபெற்ற பின், சுவாமி - அம்மன் வீதியுலா வந்து கோயில் சோ்ந்து விழா நிறைவு பெறுகிறது.

Advertisement

Advertisement