பேருந்தின் படிக்கட்டில் நின்று பயணம்: மாணவா்களை எச்சரித்த காவல் ஆய்வாளா்
தனியாா் பேருந்து படிக்கட்டில் நின்று பயணித்த மாணவா்களை சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளா் மருதுபாண்டியன் எச்சரித்து அனுப்பினாா். சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் மருது பாண்டியன் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத்துக்குச் சென்ற தனியாா் பேருந்தில் மாணவா்கள் படிக்கட்டில் நின்று பயணித்ததைக் கண்டாா்.
பின்னா், ஆனந்தபுரத்தில் அந்தப் பேருந்தை நிறுத்திய காவல் ஆய்வாளா், படிக்கட்டில் நின்ற மாணவா்களையும், நடத்துநரையும் அழைத்து அறிவுறுத்தினாா். இந்த நிலை தொடா்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினாா்.