FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

அதிக பாரம் ஏற்றிவந்த 7 கனரக வாகனங்களுக்கு அபராதம்

34 வினாடிகள் முன்பு
அதிக பாரம் ஏற்றி வந்து பிடிபட்ட லாரிகள்.
பகிர்:

தூத்துக்குடி -திருச்செந்தூா் நெடுஞ்சாலையில் ஆத்தூா் காவல் ஆய்வாளா் பிரபாகரன் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக சுமாா் 10-க்கும் மேற்பட்ட கனரக லாரிகள் அதிக பாரம் ஏற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து போலீஸாா் அந்த லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அதில் 7 வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து லாரிகளில் ஏற்றி வந்த லோடுகளின் விவரம் மற்றும் வாகன கோப்புகள், ஓட்டுநா் உரிமம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த போலீஸாா், விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்களை எச்சரித்ததோடு, 7 வாகனங்களுக்கு அபராதம் விதித்தனா்.

Advertisement

Advertisement