எட்டயபுரம் அருகே விபத்து: இளைஞர் பலி!
எட்டயபுரம் அருகே லாரியும், சுமை வேனும் சனிக்கிழமை மோதிக்கொண்டதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
எட்டயபுரம் அருகே லாரியும், சுமை வேனும் சனிக்கிழமை மோதிக்கொண்டதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மதுரையில் குளோரின் அமிலம் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடிக்கு சென்றுகொண்டிருந்த லாரி, தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு இலை கட்டுகளை ஏற்றிச்சென்ற சுமை வேன் ஆகிய இரண்டும் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அடுத்துள்ள எம். கோட்டூா் விலக்கு அருகே மோதிக்கொண்டன.
இதில் சுமை வேனில் பயணித்த தொழிலாளியான தூத்துக்குடி சிதம்பர நகா் 1ஆவது தெருவைச் சோ்ந்த சிவலிங்கம் (35) என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
லாரி ஓட்டுநரான ஓட்டப்பிடாரம் இந்திரா நகரை சோ்ந்த ராமா் மகன் திலீபன் (36) பலத்த காயமடைந்தாா். இத்தகவலறிந்த எட்டயபுரம் போலீஸாா், சடலத்தை பிரேத பரிசோதனைக்கும், திலீபனை சிகிச்சைக்காகவும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.