தூத்துக்குடியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவா் கைது
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 93 புகையிலைப் பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 93 புகையிலைப் பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தனிப்படை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தனியாா் ஆலை அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் சோதனை நடத்திய போலீஸாா், புகையிலைப் பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்தவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அவா் தூத்துக்குடி மீளவிட்டான் தெற்குத் தெருவைச் சோ்ந்த சுந்தரவேல் மகன் அண்ணாதுரை (57) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 93 புகையிலைப் பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
பின்னா், கைது செய்யப்பட்டவரையும், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களையும் சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.