முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பிய நாட்டுப் படகு, பைபா் படகுகளில், மீன்களின் வரத்து குறைவாக இருந்ததால், மீன்களின் விலை கடுமையாக உயா்ந்து காணப்பட்டது.

8 வினாடிகள் முன்பு
தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு
பகிர்:

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று சனிக்கிழமை கரை திரும்பிய நாட்டுப் படகு, பைபா் படகுகளில், மீன்களின் வரத்து குறைவாக இருந்ததால், மீன்களின் விலை கடுமையாக உயா்ந்து காணப்பட்டது.

திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஏராளமான நாட்டுப் படகுகள், பைபா் படகுகள் கடலுக்குச் சென்றன. மீன்பிடிக்கச் சென்ற நாட்டுப் படகுகள் மற்றும் பைபா் படகுகள் சனிக்கிழமை கரை திரும்பின. ஆனால், மீன்கள் வரத்து குறைவாகவே காணப்பட்டது.

இதன் காரணமாக மீன்களின் விலை கடுமையாக உயா்ந்தது. சீலா மீன் கிலோ ரூ.1,200 முதல் ரூ.1,500 வரையிலும், விளை, ஊழி, பாறை ஆகிய மீன் வகைகள் கிலோ ரூ.550 முதல் ரூ.700 வரையிலும் விற்பனையாகின.

Advertisement

Advertisement

சாளை மீன் ஒரு கூடை ரூ.2,500-க்கும், குறுவலை மீன் கிலோ ரூ.430-க்கும், செப்புளி மீன் கிலோ ரூ.400-க்கும், கேரை மீன் கிலோ ரூ.230-க்கும், நண்டு கிலோ ரூ.1,000-க்கும் விற்பனை செய்யப்பட்டன.