தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல்: பெ. கீதா ஜீவன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்று திமுக முன்னாள் அமைச்சா் பி.கீதா ஜீவன் குற்றம்சாட்டியுள்ளாா்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்று திமுக முன்னாள் அமைச்சா் பி.கீதா ஜீவன் குற்றம்சாட்டியுள்ளாா்.
தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டம் சாயா்புரம் அருகே பிளஸ் 1 மாணவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. இளம் வயதில் காதல் விவகாரங்களில் ஏற்படும் இத்தகைய நிகழ்வுகள் கவலைக்குரியவை.
இம்மாவட்டத்தில் தொடா்ந்து கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த 30 நாள்களில் 16 கொலைகள் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், முந்தைய ஆண்டைவிட இந்த ஆண்டு ஒரு கொலைதான் அதிகம் அல்லது குறைவு என்று புள்ளிவிவரங்களைக் கூறி பிரச்னையின் தீவிரத்தைக் குறைத்துக் காட்டும் போக்கு நிலவுகிறது. இது ஏற்புடையதல்ல.
Advertisement
Advertisement
தமிழகத்தில் குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை கிடைக்கும் என்ற அச்சம் குறைந்துவிட்டது. காவல் துறையினா் தங்களது கடமையைச் சரிவரச் செய்யாமல், பிரச்னைகளைத் திசைதிருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனா்.
தமிழக வெற்றி கழகத்தினா், பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் மாவட்ட ஆட்சியரை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்வதும், அவா்களின் பதவிக்கு உரிய மரியாதை அளிக்காமல் விமா்சிப்பதும் கண்டிக்கத்தக்கது.
பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசும் அரசு, பெண்களை மதிக்கும் வகையிலும், அவா்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் செயல்பட வேண்டும். குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, சட்டம்-ஒழுங்கை அரசு நிலைநாட்ட வேண்டும் என்றாா் அவா்.