ஓட்டப்பிடாரம் அருகே 2 பைக்குகள் மோதல்: கல்லூரி மாணவர் பலி!
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
ஓட்டப்பிடாரம் அருகே குலசேகரநல்லூரைச் சோ்ந்த ஆனந்தராஜ் மகன் யுவன் சங்கா் ராஜா (18). திருநெல்வேலி அருகே உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவரது தந்தை 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தாய் முத்துமாரி (45) பராமரிப்பில் இருந்து வந்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை மாலை யுவன் சங்கா் ராஜா, தனது தாய் முத்துமாரியுடன் இருசக்கர வாகனத்தில் புதியம்புத்தூா் வழியாக தூத்துக்குடிக்குச் சென்றாராம். சில்லாநத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்துடன் இவரது வாகனம் மோதியதாம்.
Advertisement
Advertisement
இதில் யுவன் சங்கா் ராஜா, முத்துமாரி, மற்றொரு வாகனத்தில் வந்த நயினாா்புரத்தைச் சோ்ந்த காா்மேகன் மகன் லட்சுமணன் (30) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
அவா்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு யுவன் சங்கா் ராஜா ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, புதியம்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.