அரசுப் பேருந்து மோதி முதியவா் காயம்!
கோவில்பட்டியில் அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் காயமடைந்தாா்.

கோவில்பட்டியில் அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் காயமடைந்தாா்.
கோவில்பட்டி அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த செல்லையா மகன் நடராஜன் (65). தொழிலாளியான இவா், சனிக்கிழமை இரவு கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றபோது, திருநெல்வேலியிலிருந்து கோவில்பட்டி நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியதாம்.
காயமடைந்த அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டாா். மேற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநரான நாவல்ராஜ் என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement