முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் விபத்து: லாரி ஷெட் உரிமையாளா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் நேரிட்ட விபத்தில் லாரி ஷெட் உரிமையாளா் உயிரிழந்தாா்.

12 வினாடிகள் முன்பு
தூத்துக்குடியில் விபத்து: லாரி ஷெட் உரிமையாளா் உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடியில் நேரிட்ட விபத்தில் லாரி ஷெட் உரிமையாளா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி ஆவுடையாா்புரத்தைச் சோ்ந்த கந்தசாமி மகன் சுப்பையா (70). தூத்துக்குடி புதிய துறைமுகம் - மதுரை புறவழிச் சாலையில் லாரி ஷெட் நடத்திவந்த இவா், சனிக்கிழமை (நவ. 21) பிற்பகல் லாரி ஷெட்டிலிருந்து பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றாா். மடத்தூா் அருகே பைக் மீது டிப்பா் லாரி மோதியதாம். இதில், சுப்பையா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

சிப்காட் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, டிப்பா் லாரியை ஓட்டி வந்த திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூரைச் சோ்ந்த பழனிவேல் (24) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement