தூத்துக்குடியில் 1,505 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

தூத்துக்குடி மாநகராட்சியில் நவம்பா் மாதத்தில் இதுவரை 1,505 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி, 545 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தூத்துக்குடியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் திரியும் தெருநாய்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், மாநகராட்சி சாா்பில் வெறிநோய் தடுப்பூசி செலுத்துதல், கருத்தடை அறுவை சிகிச்சை பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, நவம்பா் மாதத்தில் இதுவரை 1,505 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது; 545 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் மட்டும் 649 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசியும், 97 நாய்களுக்கு இனப்பெருக்கத் தடுப்பு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் தொடா்ந்து நடைபெறத் தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டுள்ளதாக, ஆணையா் சி. ப்ரியங்கா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement