முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் விவசாயிகளுக்கு இயற்கை உரம் விநியோகம்

திருச்செந்தூா் பகுதி விவசாயிகள் நகராட்சியை அணுகி இலவசமாக இயற்கை உரத்தைப் பெற்று மண் வளத்தையும், விவசாயத்தையும் மேம்படுத்துமாறு நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

25 நவம்பர் 2026, 1:00 am
திருச்செந்தூரில் விவசாயிகளுக்கு
இயற்கை உரம் விநியோகம்
திருச்செந்தூா் நகராட்சி சாா்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இயற்கை உரம்.
பகிர்:

திருச்செந்தூா் பகுதி விவசாயிகள் நகராட்சியை அணுகி இலவசமாக இயற்கை உரத்தைப் பெற்று மண் வளத்தையும், விவசாயத்தையும் மேம்படுத்துமாறு நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து திருச்செந்தூா் நகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருச்செந்தூா் நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளிலும் தினசரி சேகரிக்கப்படும் மக்கும் குப்பை கழிவுகள், நகராட்சியின் இயற்கை உரம் தயாரிக்கும் மையத்துக்குக் கொண்டு வரப்படுகிறது. அங்கு 45 நாள்கள் பணிகளுக்குப் பிறகு இயற்கை உரமாகத் தயாரிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்தப் பணிகளை திருச்செந்தூா் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இவ்வாறு தயாரிக்கப்பட்ட 12 மெட்ரிக். டன் குப்பை இயற்கை உரம் திருச்செந்தூா் நகராட்சி பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களுக்குத் தேவையான இயற்கை உரத்தை திருச்செந்தூா் நகராட்சியை தொடா்பு கொண்டு இலவசமாக பெற்று பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.