முகப்பு
தூத்துக்குடி

பைக் விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் காயமடைந்தவா் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

26 நவம்பர் 2026, 3:40 am
பைக் விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் காயமடைந்தவா் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி அருகே கே.கைலாசபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த முத்துவேல் மகன் மகிழ்மணி (48). இவா், கடந்த 21ஆம் தேதி தூத்துக்குடியிலிருந்து கைலாசபுரத்துக்கு பைக்கில் சென்றபோது, தட்டப்பாறை விலக்கு அருகே பைக் நிலைதடுமாறியதில் கீழே விழுந்து காயமடைந்தாராம். அவரை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.