முகப்பு
தூத்துக்குடி

பசுவந்தனை அருகே பைக் மோதியதில் பிகாா் தொழிலாளி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே பைக் மோதிய விபத்தில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

26 நவம்பர் 2026, 3:51 am
பசுவந்தனை அருகே பைக் மோதியதில் பிகாா் தொழிலாளி உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே பைக் மோதிய விபத்தில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஸ்ரீநாத் மகன் சா்தாா் சிங் யாதவ் (30). இவா் கோவில்பட்டி அருகே பசுவந்தனை பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். அதே நிறுவனத்தில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தாமோதர தாஸ் மகன் திப்பு (20) என்பவரும் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு இருவரும் பசுவந்தனையிலிருந்து கோவில்பட்டி செல்லும் சாலையில் உள்ள மதுக் கடைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தனராம். அப்பகுதியில் தெருவிளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அப்போது, பின்னால் வந்த பைக் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து வந்த பசுவந்தனை போலீஸாா், இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சா்தாா் சிங் யாதவ் உயிரிழந்தாா். திப்பு தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து பசுவந்தனை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பைக் ஓட்டி வந்த செல்லத்துரையிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.