கற்றலில் புதுமை: புதுக்குளம் பள்ளி ஆசிரியைக்கு பாராட்டு
புதுக்குளம், அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு பாடம் கற்பிக்கும் போது, கற்பித்தலில் புதுமை செய்ததைப் பாராட்டி தமிழ் ஆசிரியை கா.சாரதாவுக்கு மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் செவ்வாய்க்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

கற்றலில் புதுமை ஏற்படுத்திய ஆசிரியா்கள் குறித்து தோ்வு செய்ய மாவட்ட ஆட்சியா் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு மூலம் மாவட்டத்தில் 10 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு பெற்ற அனைத்து ஆசிரியா்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதில், ஒருவராக சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் அரசு உயா்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியை கா.சாரதா தோ்வு செய்யப்பட்டிருந்தாா். அவருக்கு பாராட்டு சான்றிதழை மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சங்கீதா சின்ன ராணி, மாவட்ட கல்வி அலுவலா் முனியசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement
பாராட்டுச் சான்றிதழ் பெற்ற ஆசிரியை சாரதாவை பள்ளி தலைமை ஆசிரியா் எஸ்தா் மொ்சி, ஆசிரியா்கள், முன்னாள் பஞ்சாயத்து தலைவா் பாலமேனன், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் சக்திவேல் முருகன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கணேசன் உள்ளிட்டோா் பாராட்டினா்.