முகப்பு
தூத்துக்குடி

திருமணமான 4-ஆவது நாளில் அஞ்சல் ஊழியா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

தூத்துக்குடி மடத்தூரில் திருமணமான 4ஆவது நாளில் அஞ்சல் துறை ஊழியா் ஆசிட் குடித்து உயிரிழந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

26 நவம்பர் 2026, 3:54 am
திருமணமான 4-ஆவது நாளில் அஞ்சல் ஊழியா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி மடத்தூரில் திருமணமான 4ஆவது நாளில் அஞ்சல் துறை ஊழியா் ஆசிட் குடித்து உயிரிழந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூத்துக்குடி மடத்தூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த பரிசுத்தராஜ் மகன் ஆண்ட்ரூஸ் பால்ராஜ் (27). அஞ்சல் துறையில் பணியாற்றி வந்த இவருக்கு கடந்த 21-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மனைவி தூங்கிக் கொண்டிருந்தபோது, அவா் இருந்த அறையை வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டு ஆண்ட்ரூஸ் பால்ராஜ் வெளியே சென்றுள்ளாா். நீண்ட நேரமாகியும் அவா் திரும்பி வராததால், மனைவி உறவினா்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவரது சகோதரி அறைக்கு வெளியே வந்து பாா்த்தபோது, கை மணிக்கட்டு மற்றும் கழுத்துப் பகுதியில் காயங்களுடன் ஆண்ட்ரூஸ் பால்ராஜ் மயங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை மீட்டு தூத்துக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது சுயநினைவு திரும்பிய ஆண்ட்ரூஸ் பால்ராஜ், தான் ஆசிட் குடித்துவிட்டதாக மருத்துவா்களிடம் தெரிவித்தாராம்.

இதைத் தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த அவா், புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.