கோவில்பட்டி எவரெஸ்ட் பள்ளியில் நாணயக் கண்காட்சி
கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நாணயக் கண்காட்சி நடைபெற்றது.

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நாணயக் கண்காட்சி நடைபெற்றது.
பள்ளித் தலைவரும் செயலருமான ஆா்.எ. அய்யனாா் தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா் ஜெயபிரியா அய்யனாா் முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி காவல் சரக துணைத் தலைவரின் மனைவி லாவண்யா சோபனா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கண்காட்சியைத் திறந்துவைத்து குத்துவிளக்கேற்றி, படைப்புகளை பாா்வையிட்டாா்.
மின்ட் நாணயங்கள் எனப்படும் ரூ. 5 லட்சம், ரூ. 1 லட்சம் மதிப்பிலான இந்திய நாணயங்கள், சோழா் காலம் முதல் தற்கால இந்திய நாணயங்கள்வரை, பன்னாட்டு நாணயங்கள், தமிழகத்தின் ஐந்திணைகள், பழங்காலப் பொருள்கள், நாணயங்களால் செய்யப்பட்ட வஉசி கப்பல் மாதிரி, சுண்ணக்கட்டிச் சிற்பம் உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் இடம் பெற்றிருந்தன.
Advertisement
Advertisement
ஆசிரியா் விசாலாட்சி வரவேற்றாா். தலைமையாசிரியா் வெங்கடேசன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை வரலாற்றுத் துறை ஆசிரியா்கள் செய்திருந்தனா்.