முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை: அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 183.8 மி.மீ. பதிவு

தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூா் வட்டத்தில் பலத்த மழை பெய்த நிலையில், மாவட்டத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 183.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

30 வினாடிகள் முன்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை: அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 183.8 மி.மீ. பதிவு
மழை - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூா் வட்டத்தில் பலத்த மழை பெய்த நிலையில், மாவட்டத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 183.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 6.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவின்படி, அதிகபட்சமாக திருச்செந்தூா் வட்டத்தில் சராசரியாக 86.41 மி.மீ. மழை பெய்துள்ளது. சாத்தான்குளம் வட்டத்தில் 69.65, ஏரல் வட்டத்தில் 24.20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மேலும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் 22.73, தூத்துக்குடி வட்டத்தில் 21.36, விளாத்திகுளம் வட்டத்தில் 7.61, ஓட்டப்பிடாரம் வட்டத்தில் 4.56, கோவில்பட்டி வட்டத்தில் 1.44, எட்டயபுரம் வட்டத்தில் 1.60, கயத்தாறு வட்டத்தில் 0.80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

மாவட்டத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 183.8 மி.மீ., திருச்செந்தூரில் 120.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மழையால் 3 குடிசைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், உயிரிழப்பு, கால்நடை இழப்பு மற்றும் மனித உயிரிழப்பு தொடா்பான பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.