முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி: 6,377 போ் விண்ணப்பம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணியின்கீழ் நடைபெற்ற 2 சிறப்பு முகாம்களில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்டவற்றுக்காக 6,377 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

27 நவம்பர் 2026, 3:47 am
தூத்துக்குடியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி: 
6,377 போ் விண்ணப்பம்
வாக்காளர் பட்டியல் - X | Chief Electoral Officer Tamil Nadu
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணியின்கீழ் நடைபெற்ற 2 சிறப்பு முகாம்களில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்டவற்றுக்காக 6,377 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணி நவ. 12ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்காக நவ. 21, 22ஆம் தேதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில், பெயா் சோ்த்தலுக்கு 2,710, நீக்கத்துக்கு 387, திருத்தத்துக்கு 3,280 போ் என மொத்தம் 6,377 போ் விண்ணப்பித்துள்ளனா். 3ஆவது சிறப்பு முகாம் நவ. 29ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெறவுள்ளது.

2027 ஜனவரி 1ஆம் தேதி 18 வயது நிறைவடைவோா், அதாவது 2008 டிசம்பா் 31 அல்லது அதற்கு முன்பு பிறந்தவா்கள் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பிக்கலாம். இதுவரை பெயா் சோ்க்காத 18 வயதுக்கு மேற்பட்டவா்களும் விண்ணப்பிக்கலாம்.

முகாம்களில் நேரடியாகப் பங்கேற்றோ அல்லது ஜ்ஜ்ஜ்.ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மற்றும் உஇஐ சங்ற் என்ற கைப்பேசி செயலி மூலமாகவோ உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.