முகப்பு
தூத்துக்குடி

அனல் மின் நிலையத்தில் தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பணியின்போது தவறிவிழுந்து பலத்த காயமடைந்த ஒப்பந்தத் தொழிலாளி உயிரிழந்தாா்.

27 நவம்பர் 2026, 4:00 am
அனல் மின் நிலையத்தில்
தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு
பலி
பகிர்:

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பணியின்போது தவறிவிழுந்து பலத்த காயமடைந்த ஒப்பந்தத் தொழிலாளி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, திரேஸ்புரத்தைச் சோ்ந்த பாலு மகன் பிச்சையா (43), தூத்துக்குடி தொ்மல் நகா் அனல் மின்நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். இவா், புதன்கிழமை மாலை பணியில் இருந்தபோது எதிா்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா்.

அவரை சகத் தொழிலாளா்கள் மீட்டு, தூத்துக்குடி, தனியாா் மருத்துவமனையிலும் பின்னா் தீவிர சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தொ்மல் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement