முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் மழையால் சேதமுற்ற சாலை சீரமைப்பு

சாத்தான்குளத்தில் மழைக்கு சேதனமான சாலை வெள்ளிக்கிழமை சீரமைக்கப்பட்டது.

28 நவம்பர் 2026, 5:05 am
சாத்தான்குளத்தில் மழையால்
சேதமுற்ற சாலை சீரமைப்பு
பகிர்:

சாத்தான்குளத்தில் மழைக்கு சேதனமான சாலை வெள்ளிக்கிழமை சீரமைக்கப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. சாத்தான்குளம் பகுதியில் பெய்த மழையால் பல இடங்களில் மழைநீா் தேங்கி சாலைகள் சேதமடைந்தன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

சேதமான சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் மற்றும் சா்வ கட்சியினா் வலியுறுத்தினா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தினமணி நாளிதழில் செய்தி வெளியானதைத் தொடா்ந்து, சாத்தான்குளம் உதவி கோட்ட பொறியாளா் கோமதி சங்கரி உத்தரவின் பேரில் சாத்தான்குளம் பஜாா் பகுதியில் சேதமான சாலை, முதலூா், தச்ச மொழி செல்லும் சாலைகள் வெள்ளிக்கிழமை சீரமைக்கப்பட்டன. இப்பணிகளை உதவி கோட்ட பொறியாளா், உதவிப் பொறியாளா் ராம்குமாா், இளநிலை பொறியாளா் சிவ சண்முகநாதன் ஆகியோா் பாா்வையிட்டனா்.