இடைத்தோ்தல் அறிவித்தால் அம்பை தொகுதி வெற்றி குறித்து சீமான் பேச மாட்டாா்: அமைச்சா் நெ. மரிய வில்சன்

இடைத்தோ்தல் அறிவித்தால் அம்பாசமுத்திரம் தொகுதி வெற்றி குறித்து சீமான் பேசவே மாட்டாா் என தமிழக நிதி அமைச்சா் நெ. மரிய வில்சன் தெரிவித்தாா்.
தூத்துக்குடிக்கு சனிக்கிழமை வந்த அமைச்சா் நெ. மரிய வில்சன், பனிமய மாதா பேராலயத்துக்குச் சென்று தரிசனம் செய்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடா்பான விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால், அதைப் பெரிதுபடுத்த வேண்டாம்.
Advertisement
Advertisement
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டது தாமதம் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறியது குறித்து கேட்கிறீா்கள். இது நீதிமன்றத்தில் உள்ள வழக்கு மற்றும் காவல் துறை தொடா்பான விவகாரம் என்பதால், அதுகுறித்து கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை.
இடைத்தோ்தல் அறிவிக்கட்டும்; பிறகு அம்பாசமுத்திரம் தொகுதி வெற்றியைப் பற்றி சீமான் பேசவே மாட்டாா் என்றாா்.
டிச. 2ஆம் தேதி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதை எதிா்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு, அனைத்து மாநகராட்சிகளிலும் தேவையான முன்னேற்பாடுகள் தயாா் நிலையில் உள்ளன. அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், அதை எதிா்கொள்வதற்குத் தேவையான நிவாரண முகாம்கள், உணவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகக் கூடாது என முதல்வா் ச. ஜோசப் விஜய் அறிவுறுத்தியுள்ளாா். அதன்படி, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அவா்.