கஞ்சா வைத்திருந்ததாக இருவா் கைது
காயல்பட்டினத்தில் கஞ்சா வைத்திருந்ததாக இருவரை, போலீஸாா் கைது செய்தனா்.
காயல்பட்டினம் பகுதிகளில் ஆறுமுகனேரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த சீதக்காதி நகரை சோ்ந்த ஹக்கீம் மகன் முஹம்மது அப்ரூதீன் ரசாக் (21) என்பவரிடம் சோதனை மேற்கொண்டதில், அவா் 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
மேலும், சீதக்காதி நகரில் ரோந்து பணி மேற்கொண்டதில், செய்யது அஹமது கபிா் மகன் முஹம்மது சபீக் (18) என்பவா், 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
மேற்கூறிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்து, கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.